ADDED : ஏப் 28, 2024 03:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: கர்நாடகாவிற்கு மத்திய அரசு ஒதுக்கிய வறட்சி நிவாரண நிதி போதுமானது அல்ல எனக்கூறி அம்மாநில முதல்வர் சித்தராமையா தர்ணாவில் ஈடுபட்டார்.
சட்டசபை வளாகத்தில் காந்தி சிலை முன்பு  நடந்த இந்தப் போராட்டத்தில் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், அமைச்சர்கள் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  கைகளில் தண்ணீர்க்குவளையையும், செம்மையும் ஏந்தியபடி  தர்ணாவில் ஈடுபட்டனர்.
முன்னதாக நிருபர்களிடம் பேசிய சித்தராமையா கூறியதாவது: தேசிய பேரிடர் நிவாரண நிதி விதிகளின்படி கர்நாடகாவிற்கு மத்திய அரசு ரூ.18,171 கோடி ஒதுக்கி இருக்க வேண்டும். ஆனால், வறட்சி நிவாரண நிதியாக வெறும் ரூ.3,498 கோடியை மட்டுமே மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. இது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்குவதற்கு போதுமானது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

