தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு
தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு
ADDED : பிப் 01, 2024 05:15 PM

புதுடில்லி: தமிழகத்திற்கு பிப்ரவரி மாதத்திற்கான 2.5 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
காவிரி நீரை பெறுவதற்கு தமிழகம் தொடர்ந்து கர்நாடகாவிடம் போராடி வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையமும், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டும், குறைவான அளவே திறக்கப்பட்டது. இது தொடர்பாக இரு மாநிலங்கள் இடையே அடிக்கடி பிரச்னை நீடித்து வருகிறது.
இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28வது கூட்டம் இன்று (பிப்.,1) டில்லியில் கூடியது. இதில் தமிழக, கர்நாடக அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில், தமிழகத்திற்கு பிப்ரவரி மாதத்திற்கான 2.5 டிஎம்சி தண்ணீரை விநாடிக்கு 998 கனஅடி வீதம் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.