சுற்றுலாவில் நிகழ்ந்த சோகம்! கடலில் மூழ்கி பள்ளி மாணவிகள் 4 பேர் பலி
சுற்றுலாவில் நிகழ்ந்த சோகம்! கடலில் மூழ்கி பள்ளி மாணவிகள் 4 பேர் பலி
UPDATED : டிச 11, 2024 10:29 AM
ADDED : டிச 11, 2024 09:22 AM

கோலார்; கர்நாடகாவில் பள்ளி சுற்றுலா சென்ற போது கடலில் குளித்த 4 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோலார் மாவட்டத்தில் உள்ள பிரபல பள்ளியில் படிக்கும் 54 மாணவிகள் பள்ளிச் சுற்றுலா சென்றனர். அதன் ஒரு பகுதியாக அவர்கள், முருடேஸ்வரர் கோவில் கடற்கரைக்கு பொழுதை கழிக்க சென்றனர்.
அவர்களில் 7 மாணவிகள் ஒன்றாக கடற்கரையில் குளிக்க இறங்கி இருக்கின்றனர். அப்போது எதிர்பாராத விதமாக கடல் அலையில் அவர்கள் இழுத்துச் செல்லப்பட்டனர். அபயக்குரல் எழுப்பிய மாணவிகளை கண்ட ஆசிரியர்கள், கடலில் குதித்து காப்பாற்ற முயன்றனர்.
நீண்ட நேர போராட்டத்தில் 7 மாணவிகளில் 3 பேரை மட்டுமே அவர்களால் காப்பாற்ற முடிந்தது. ஸ்ரீவந்ததி, தீஷிதா, வந்தனா, லாவண்யா ஆகிய 4 மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழத்தனர். காப்பாற்றப்பட்ட யசோதா, வீக்ஷனா, லிபிகா ஆகியோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்த மாவட்ட வருவாய் அதிகாரிகள் உள்ளிட்டோர் மருத்துவனைக்கு சென்று நிலைமையை கேட்டறிந்தனர். வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.