காங்., போட்டி வேட்பாளருக்கு தாவணகெரேயில் 'காஸ்' சின்னம்
காங்., போட்டி வேட்பாளருக்கு தாவணகெரேயில் 'காஸ்' சின்னம்
ADDED : ஏப் 24, 2024 07:14 AM

தாவணகெரே: தாவணகெரேயில் காங்கிரசை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடும் வினய் குமாருக்கு 'காஸ் சிலிண்டர்' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில், தாவணகெரே தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் மேலிடத்தில் வினய்குமார் சீட் கேட்டிருந்தார். ஆனால் கட்சி மேலிடமோ, காங்கிரஸ் எம்.எல்.ஏ., சாமனுார் சிவசங்கரப்பாவின் மருமகள் பிரபாவதி மல்லிகார்ஜுனுக்கு வழங்கியது.
அதிருப்தி அடைந்த வினய்குமார், சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்தார். அவரை சமாதானப்படுத்த கட்சித் தலைவர்கள் பலரும் முயற்சித்தும் முடியவில்லை.
மனுக்கள் வாபஸ் பெற ஏப்., 22ம் தேதி கடைசி நாளில் வாபஸ் பெறுவார் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அவர் கடைசி வரை வாபஸ் பெற வில்லை. அவருடன் சேர்த்து 30 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இதில், வினய்குமாருக்கு 'காஸ்' சின்னத்தை, தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. இதை தனது சமூக வலைதளங்களில் வினய் குமார் பதிவிட்டுள்ளார்.

