ADDED : பிப் 11, 2025 08:07 PM
கபுர்தலா:காஷ்மீரி சால்வை விற்பனையாளரை தாக்கி, சால்வைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடுகின்றனர்.
ஜம்மு - காஷ்மீரின் குப்வாரா நகரைச் சேர்ந்தவர் பரீத் அகமது பஜாத். காஷ்மீரி சால்வை விற்பனையாளர்.
பஞ்சாப் மாநிலம் கபுர்தாலாவில் நேற்று, தெரு தெருவாக சென்று சால்வை விற்பனை செய்தார். அப்போது, பைக்கில் வந்த மூவர், பஜாத்தை தாக்கி, 25,000 மதிப்புள்ள சால்வைகள், 8,000 ரூபாய் பணம் மற்றும் அவரது மொபைல் போன் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். மேலும், கொள்ளையருடன் போராடியத்தில் பஜாத்துக்கு காயம் ஏற்பட்டு இருந்தது. அவரை மருத்துவமனையில் சேர்த்த போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
இதேபோல, கபுர்தலாவில் ஜன., 18ம் தேதி காஷ்மீரி சால்வை விற்பனையாளர் முஹமது ஷபி கொள்ளையரால் தாக்கப்பட்டு, சால்வை மற்றும் பணத்தை பறிகொடுத்தார். அந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஜாத்தை தாக்கி கொள்ளையடித்தவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

