sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.1,500: தேர்தலை மனதில் வைத்து முதல்வர் மம்தா அறிவிப்பு

/

 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.1,500: தேர்தலை மனதில் வைத்து முதல்வர் மம்தா அறிவிப்பு

 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.1,500: தேர்தலை மனதில் வைத்து முதல்வர் மம்தா அறிவிப்பு

 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.1,500: தேர்தலை மனதில் வைத்து முதல்வர் மம்தா அறிவிப்பு

8


ADDED : மார் 08, 2026 12:58 AM

Google News

8

ADDED : மார் 08, 2026 12:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ''10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று வேலையில்லாமல் இருக்கும் இளைய தலைமுறையினருக்கு, மாதம் 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்,'' என, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

மகளிர் தின பரிசு


மே ற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள, 294 சட்டசபை தொகுதிகளுக்கு தமிழகத்துடன் சேர்த்து விரைவில் தேர்தல் நடக்க உள் ளது.

தலை நகர் கொல்கட்டாவில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில், தேர்தல் கமிஷன் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி, முதல்வர் மம்தா நடத்தி வரும் தர்ணா, இரண்டாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது.

இதில், முதல்வர் மம்தா பானர்ஜி பேசிய தாவது:

மேற்கு வங்கத்தில், 21 - 40 வயதுக்குட்பட்ட, 10ம் வகுப்பு தேர்ச்சி பெ ற்று வேலையில்லாமல் இருக்கும் இளைய தலைமுறையினருக்கு, அவர்கள் சுயசார்புடன் முன்னேற உதவும் வகையில் மாதம், 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இத்திட்டத்தை உண்மையில், ஏப்., 1ல் துவக்க திட்டமிட்டிருந்தோம்.

ஆனால், சர்வதேச மகளிர் தின பரிசாக உடனடியாக அமல் படுத்துகிறோம்.

கல்வி உதவித்தொகை தவிர வேறு எந்த அரசு திட்டங்களின் பலன்களையும் பெறாத, 1 கோடி பேர் இத்திட்டம் மூலம் பயனடைவர். மாநிலத்தில் வேலையில்லா திண்டாட்டம், 40 சதவீதம் குறைந்துள்ளது. 'உத்கர்ஷ பங்களா' திட்டம் மூலம், 40 லட்சம் பேருக்கு திறன் பயிற்சி அளித்துள்ளோம்.

1 லட்சம் பேர்


அதி ல், 10 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. விவசாயிகளுக்கு மாதம், 10,000 ரூபாய் வழங்கி வருகிறோம். நிலமற்ற விவசாயிகளுக்கு, 4,000 ரூபாய் உதவித்தொகை அ றிவிக்கப்பட்டு உள்ளது.

ஐ.டி., துறையில் பெங்களூரை விட இங்கு அதிக மக்கள் பணிபுரிகின்றனர். 200 புதிய நிறுவனங்கள் இங்கு வந்துள்ளன. சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களில், மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது.

பிர்பும் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம் மூலம், 1 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும். அடுத்த 100 ஆண்டுகளுக்கு மின் தட்டுப்பாடு இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

கவர்னர் ரவிக்கு எச்சரிக்கை

போராட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி மேலும் பேசியதாவது: மேற்கு வங்க கவர்னராக இருந்த அனந்த போசை மிரட்டி, மத்திய பா.ஜ., அரசு ராஜினாமா செய்ய வைத்திருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கு கவர்னர் மாளிகை மூலம் பணப் பட்டுவாடா செய்ய பா.ஜ., விரும்புகிறது. கவர்னர் மாளிகையை கட்சி அலுவலகமாக மாற்றவும் முயற்சிக்கிறது. ஆனால், பா.ஜ.,வின் விருப்பங்களுக்கு எல்லாரும் அடிபணிய மாட்டார்கள். புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ரவியை, உச்ச நீதிமன்றம் பல முறை கண்டித்துள்ளது. அவர் ஒரு பா.ஜ., தொண்டர். மேற்கு வங்கம் ஒரு வித்தியாசமான இடம். தமிழகத்தில் அவர் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஆனால், இங்கே அது முடியாது. அதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.



காஸ் விலை உயர்வு: இன்று போராட்டம்

வீட்டு உபயோகத்துக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை, 60 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை, 114.50 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. இதை கண்டித்து, மேற்கு வங்கம் முழுதும், ஆளும் திரிணமுல் காங்கிரசின் மகளிர் பிரிவு சார்பில், இன்று போராட்டம் நடக்கிறது. கொல்கட்டாவில் நடக்கும் போராட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.








      Dinamalar
      Follow us