ADDED : செப் 15, 2024 02:30 PM

புதுடில்லி: '' ஊழல் தலைவர் என பெயர் எடுத்ததை மாற்றுவதற்காக ராஜினாமா என்ற நாடகத்தை கெஜ்ரிவால் அரங்கேற்றுகிறார், '' என பா.ஜ., கூறியுள்ளது.
மதுபான கொள்கை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே வந்துள்ள டில்லி முதல்வர் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியினர் இடையேபேசும் போது 2 நாளில் முதல்வர் பதவியில் இருந்து விலக போவதாக அறிவித்தார்.நான் நேர்மையானவன் எனக்கருதி எனக்கு மக்கள் ஓட்டளித்தால் மீண்டும் முதல்வர் பதவியில் அமர்வேன் எனக்கூறினார்.
இது தொடர்பாக பா.ஜ.,வின் செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கூறியதாவது: கெஜ்ரிவாலின் அறிவிப்பு வெறும் நாடகம். நேர்மையான தலைவர் என இல்லாமல் ஊழல் தலைவர் என்ற பெயர் வந்துள்ளது அவருக்கு தெரியும். நாடு முழுவதும் ஊழல் கட்சி என்ற பெயரை எடுத்துள்ளது அக்கட்சிக்கு தெரியும். தற்போது ராஜினாமா என்ற நாடகத்தை அரங்கேற்றி தனது பெயரை மாற்ற முயற்சிக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.