4வது முறையாக அமலாக்கத்துறை சம்மனை நிராகரிக்கும் கெஜ்ரிவால்
4வது முறையாக அமலாக்கத்துறை சம்மனை நிராகரிக்கும் கெஜ்ரிவால்
ADDED : ஜன 18, 2024 01:00 PM

புதுடில்லி: 4வது முறையாக அமலாக்கத்துறை சம்மனை டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நிராகரித்துள்ளார். அவர் கோவா பயணம் மேற்கொள்கிறார்.
டில்லி அரசின் 2021- 2022ம் நிதியாண்டின் புதிய மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு, 4வது முறையாக இன்று ஜன.,18ம் தேதி ஆஜர் ஆகுமாறு அமலாக்கத்துறை கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பி இருந்தது.
இந்நிலையில், 4வது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நிராகரித்துள்ளார். அவர் தற்போது வரை விசாரணைக்கு ஆஜராகவில்லை. லோக்சபா தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக கெஜ்ரிவால் கோவா செல்கிறார்.
ஏற்கனவே நவ.2, டிச.21, ஜன.3 தேதிகளில் ஆஜராக கோரி அனுப்பிய சம்மனை கெஜ்ரிவால் புறக்கணித்தார். அமலாக்கத்துறை தனக்கு அனுப்பிய சம்மன் சட்டவிரோதம் என கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.