கெஜ்ரிவால் அப்பீல் மனு : இன்று உச்சநீதிமன்றம் விசாரணை
கெஜ்ரிவால் அப்பீல் மனு : இன்று உச்சநீதிமன்றம் விசாரணை
UPDATED : மார் 22, 2024 12:51 AM
ADDED : மார் 22, 2024 12:40 AM

புதுடில்லி: மதுபான கொள்கை வழக்கில் நேற்று இரவு கைது செய்யப்பட்ட டில்லி ஆம் ஆத்மி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு நேற்றிரவு சென்ற ஈ.டி., எனப்படும் அமலாக்கத்துறை அதிகாரிகள், அங்கு இரண்டு மணி நேரம் சோதனை நடத்திய பின், அவரை அதிரடியாக கைது செய்தனர்.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பெயர் இடம் பெற்றுள்ளதால் அமலாக்கத்துறை எட்டு முறை சம்மன் அனுப்பியது.
இந்நிலையில், தன் மீது கைது நடவடிக்கை எடுப்பதில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்படி, அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
இதையடுத்து அவரது கெஜ்ரிவால் வீடு புகுந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு மணி நேரம் விசாரித்து கைது செய்து தங்கள் காவலில் வைத்துள்ளனர்.
முதன்முறை
இதன் மூலம் ஊழல் வழக்கில் முதன்முறையாக பதவியில் இருக்கும் முதல்வர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் டில்லி ஐகோர்ட் நிராகரித்ததை எதிர்த்தும் தனது கைதை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் நேற்று கெஜ்ரிவால் சார்பில் அப்பீல் செய்யப்பட்டது அவசர வழக்காக எடுத்துக்கொள்ள கோரிக்கைவிடப்பட்டதால், இன்று விசாரணைக்கு வருகிறது.

