தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/தொழிலாளர்களை திரும்ப அழைக்கும் மே.வங்கம்: கேரள கட்டுமான துறை முடங்கும் அபாயம்

தொழிலாளர்களை திரும்ப அழைக்கும் மே.வங்கம்: கேரள கட்டுமான துறை முடங்கும் அபாயம்

தொழிலாளர்களை திரும்ப அழைக்கும் மே.வங்கம்: கேரள கட்டுமான துறை முடங்கும் அபாயம்


UPDATED : நவ 07, 2026 04:48 PM

ADDED : நவ 07, 2026 03:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 04:48 PM ADDED : நவ 07, 2026 03:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோட்டயம்: வெளிமாநிலங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களை சொந்த மாநிலத்துக்கு திரும்பி வேலை செய்யும்படி மேற்கு வங்க அரசு அழைப்பு விடுத்துள்ளதால், கேரளாவில் தொழிலாளர் தட்டுப்பாடு ஏற்பட்டு கட்டுமானப் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் கட்டுமானம், உள்கட்டமைப்பு, ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வெளிமாநில தொழிலாளர்கள் அதிகளவில் பணியாற்றுகின்றனர். இவர்களில் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் நீண்டகாலமாக கட்டுமான துறையின் முக்கிய தொழிலாளர் பிரிவாக இருந்து வருகின்றனர்.

பாரம்பரிய கேரள பாணியில் வீடுகள் கட்டுவதில் திறமையான தொழிலாளர்களும் இவர்களில் உள்ளனர். கேரளாவில் மேற்கு வங்கத் தொழிலாளர்கள் மட்டும் அல்லாமல் ஜார்க்கண்ட், ஒடிஷா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பணியாற்றுகின்றனர்.

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தினமும் 1,200 முதல் 1,300 ரூபாய் வரை கூலி கிடைக்கிறது. மேற்கு வங்கத்தில் இதே வேலைக்கு 650 முதல் 700 ரூபாய் வரை மட்டுமே கிடைப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பா.ஜ.,வைச் சேர்ந்த மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி, வெளிமாநிலங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்துக்குத் திரும்பி குடும்பத்துடன் வசித்தபடி வேலை செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

'விபி -ஜி ராம் ஜி' எனப்படும், கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 125 நாட்கள் வேலை அளிக்கப்படுவதாகவும், ஒவ்வொரு வேலை அட்டைதாரருக்கும் ஆண்டுக்கு 34,500 வருவாய் கிடைக்கும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

இந்த அறிவிப்பு கேரளாவில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபை தேர்தலுக்குப் பின் ஏற்கனவே மேற்கு வங்க தொழிலாளர்களின் வருகை குறைந்துள்ளதாகவும், புதிய அறிவிப்பு இந்த போக்கை மேலும் அதிகரிக்கலாம் என கட்டுமான ஒப்பந்ததாரர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து கட்டுமான ஒப்பந்ததாரர் விஜயகுமார் கூறுகையில், “மேற்கு வங்கத்தில் இருந்து பல ஆண்டுகளாக கேரளாவுக்கு வந்து பணியாற்றும் தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால், பல்வேறு காரணங்களால் தற்போது பலர் சொந்த மாநிலத்திலேயே வேலை செய்ய முடிவு செய்கின்றனர்.

“புதிய அரசின் அறிவிப்பு இந்த வருகையை மேலும் பாதிக்கலாம். குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் சொந்த மாநிலத்தில் தங்கினால், கேரள கட்டுமானத் துறை கடுமையாகப் பாதிக்கப்படும்”, என்றார்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளர் ஒருவர் கூறுகையில், 'பல ஆண்டுகளாக வெளிமாநிலங்களில் வேலை செய்து சொந்த ஊரில் நிலம் வாங்கி, வாழ்க்கை தரத்தை உயர்த்தியுள்ளோம். இப்போது சிலர் சொந்த ஊருக்குத் திரும்பி விவசாயம் செய்வதுடன், கிடைக்கும் வேலைகளையும் செய்து வருமானம் ஈட்ட விரும்புகின்றனர். குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட்டு, சொந்த ஊரில் நிலையான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற விருப்பமும் இதற்குக் காரணம்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us