தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ஞானேஷ் குமார் மீதான லஞ்ச வழக்கு விசாரணைக்கு கேரள அரசு உத்தரவு

ஞானேஷ் குமார் மீதான லஞ்ச வழக்கு விசாரணைக்கு கேரள அரசு உத்தரவு

ஞானேஷ் குமார் மீதான லஞ்ச வழக்கு விசாரணைக்கு கேரள அரசு உத்தரவு

2


UPDATED : நவ 05, 2026 11:47 PM

ADDED : நவ 04, 2026 06:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2026 11:47 PM ADDED : நவ 04, 2026 06:05 PM

2


2
Follow on Google
அ நிறம் | அளவு

திருவனந்தபுரம்: தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார், கேரளாவில் பொதுப்பணி துறை செயலராக பணியாற்றிய போது, 2 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்த, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுக்கு, மாநில உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுதும் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி விவகாரத்தில், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கு முன் கேரளாவின் பொதுப்பணித் துறை செயலராக ஞானேஷ் குமார் பணியாற்றிய போது, கேரள மாநில போக்குவரத்து திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சாலைப் பணிகளுக்கான தொகையை விடுவிக்க லஞ்சம் கேட்டதாக ஒப்பந்ததாரர் சஜன், ஊழல் மற்றும் கண்காணிப்பு பிரிவில் சமீபத்தில் புகார் அளித்தார். அதன் விபரம்:

கடந்த 2006ல், கேரள மாநில போக்குவரத்து திட்டத்தின் கீழ், மலேஷியாவைச் சேர்ந்த, ‘பட்டிபெல்’ நிறுவனம் மேற்கொண்ட சாலை மேம்பாட்டு பணிகள் முடிவடைந்தன. இதற்காக 17 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்துக்கு பொறியாளர்கள் ஒப்புதல் அளித்திருந்தனர். ஆனால், அப்போதைய பொதுப்பணித் துறை செயலர் ஞனேஷ் குமார், அதற்கான காசோலையை விடுவிக்க 2 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டார்.

லஞ்சம் கொடுக்க நிறுவன நிர்வாகம் மறுத்ததால், ஒப்பந்ததாரர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகையை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. நெருக்கடி காரணமாக 2006ல் மலேஷியாவைச் சேர்ந்த திட்ட பொறியாளர் லீ சீ பின் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய கடிதத்தில், ஞானேஷ் குமார் லஞ்சம் கேட்டது குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக, 2006ம் ஆண்டில் நடத்தப்பட்ட விசாரணை போதிய ஆதாரம் இல்லாததால் கைவிடப்பட்டது. தற்போது, இந்த வழக்கு தொடர்பாக தேவையான ஆதாரங்களை சமர்ப்பிக்க தயாராக உள்ளோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த மாநில உள்துறை அமைச்சகம், கேரள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 4ம் தேதி, காங்., தலைவர் மலையின்கீழ் வேணுகோபால் கேரள மாநில போக்குவரத்து திட்டத்தில் ஊழல் நடந்ததாக அளித்த புகார் தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு விசாரணை நடத்தி வரும் சூழலில், இந்த புதிய புகார் குறித்தும் விசாரிக்க உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us