தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/‘குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டாம்’

‘குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டாம்’

‘குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டாம்’


UPDATED : நவ 05, 2026 11:51 PM

ADDED : நவ 04, 2026 06:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2026 11:51 PM ADDED : நவ 04, 2026 06:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பட்டாசு வெடிக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது.

பேரிடர் மேலாண்மை துறை செயலரும், கலெக்டருமான குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பட்டாசு வெடிக்கும்போது விபத்துகள் மற்றும் தீக்காயங்கள் ஏற்படாமல் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

பட்டாசு வெடிக்கும் இடத்தில் குறைந்தது இரண்டு வாளிகளில் தண்ணீர் தயாராக வைத்திருக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது குழந்தைகள் பருத்தி ஆடைகளை அணிவது பாதுகாப்பானது. நைலான், பாலியஸ்டர், பட்டு ஆடைகளை தவிர்ப்பது நல்லது.

பட்டாசு வெடிக்கும்போது குழந்தைகள் கால்களில் காலணிகள் அணிய வேண்டும். பற்றவைத்த பட்டாசு வெடிக்காதபோது, அதன் அருகில் சென்று குனிந்து பார்க்கவோ, மீண்டும் பற்றவைக்க முயற்சிக்கவோ கூடாது.

பட்டாசுகளை கையில் வைத்துப் பற்றவைக்கக்கூடாது. திறந்தவெளியில், வைத்து பற்றவைக்க வேண்டும். குழந்தைகள் பெரியவர்களின் நேரடிக் கண்காணிப்பில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டாம்.

பட்டாசு வெடிக்கும் இடத்திற்கு அருகில் முதலுதவிப் பெட்டி மற்றும் சுத்தமான தண்ணீரைத் தயாராக வைத்திருக்க வேண்டும். தீக்காயம் ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட இடத்தை உடனடியாக குளிர்ந்த ஓடும் நீரில் 20 நிமிடங்கள் கழுவி, மருத்துவ உதவியை நாட வேண்டும். தீக்காயத்தின் மீது எண்ணெய், மை அல்லது பற்பசை பூசக்கூடாது.

அனுமதிக்கப்பட்ட நேரங்களில், அங்கீகரிக்கப்பட்ட பசுமைப் பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மருத்துவமனைகள், பள்ளிகள் அருகில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். பட்டாசுக் கழிவுகளை முறையாக அகற்றி சுற்றுப்புறத் துாய்மையைப் பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us