கேரளா கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து விபத்து; 8 பேர் சீரியஸ்; 150 பேர் காயம்
கேரளா கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து விபத்து; 8 பேர் சீரியஸ்; 150 பேர் காயம்
ADDED : அக் 29, 2024 07:09 AM

திருவனந்தபுரம்: கேளாவில், காசர்கோடு அருகே கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில், பலத்த காயமுற்று 8 பேர் உயிருக்கு போராடி வருகின்றனர். 150 பேர் பலத்த காயமுற்றனர்.
கேரளாவில், காசர்கோடில் நீலேஸ்வரம் அருகே வீரர்காவு கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது. திருவிழாவில் வாணவேடிக்கை களியாட்டம் நிகழ்ச்சியின் போது, ஏராளமானோர் பட்டாசு வெடித்து கொண்டிருந்தனர். அப்போது பட்டாசு வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. திருவிழாவில் கூடியிருந்த மக்கள் ஓட்டம் பிடித்தனர். சிலர் தீயில் சிக்கி கொண்டனர். 150 பேர் பலத்த காயமுற்றனர். பலத்த காயம் அடைந்த, 8 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். காயமடைந்தவர்கள் காசர்கோடு மற்றும் மங்களூருவில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

