கேரள முதல் பெண் டி.ஜி.பி., ஸ்ரீலேகா பா.ஜ.,வில் ஐக்கியம்
கேரள முதல் பெண் டி.ஜி.பி., ஸ்ரீலேகா பா.ஜ.,வில் ஐக்கியம்
ADDED : அக் 11, 2024 06:06 AM

திருவனந்தபுரம் : கேரள முதல் பெண் டி.ஜி.பி., ஸ்ரீலேகா, பா.ஜ., மாநில தலைவர் சுரேந்திரன் முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்தார்.
ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரியும், கேரள மாநில முதல் பெண் டி.ஜி.பி.,யுமான ஸ்ரீலேகா நேற்று பா.ஜ.,வில் இணைந்தார். கட்சியின் மாநிலத் தலைவர் சுரேந்திரன், திருவனந்தபுரத்தில் உள்ள முன்னாள் டி.ஜி.பி., ஸ்ரீலேகா வீட்டுக்குச் சென்று அவருக்கு பா.ஜ., உறுப்பினர் அட்டையை வழங்கி கட்சியில் இணைத்துக் கொண்டார்.
கடந்த 1987ல் ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியில் சேர்ந்த ஸ்ரீலேகா போலீஸ் துறையில் ஐ.ஜி., உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார். 33 ஆண்டுகள் பணியாற்றிய ஸ்ரீலேகா 2020ல் ஓய்வு பெற்றார்.
பா.ஜ.,வில் இணைந்த ஸ்ரீலேகா செய்தியாளர்களிடம் கூறுகையில், ''பிரதமர் மோடியின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு பா.ஜ.,வில் இணைந்துள்ளேன். கடந்த 33 ஆண்டுகால பணியின்போது நடுநிலையுடன் பணியாற்றினேன். மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றவே கட்சியில் இணைந்துள்ளேன்,'' என்றார்.