ADDED : ஜூன் 28, 2025 08:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாண்டியா:கர்நாடகா - தமிழக விவசாயிகளின் உயிர்நாடியான கே.ஆர்.எஸ்., என்ற கிருஷ்ணராஜ சாகர் அணை, 84 ஆண்டுகளுக்கு பின், ஜூன் மாதத்தில் நிரம்பியுள்ளது.
கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம், கண்ணம்பாடி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே, கே.ஆர்.எஸ்., அணை உள்ளது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மே மாதத்திலேயே துவங்கியதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவு 49.45 டி.எம்.சி., நேற்று நீர் இருப்பு 47.31 டி.எம்.சி.,யாக இருந்தது.
அணைக்கு நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 73,811 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து, 38,983 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.