ADDED : ஜன 09, 2025 02:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாண்டியா: கர்நாடகாவின் மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கபட்டணாவில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது கிருஷ்ணராஜ சாகர் எனும் கே.ஆர்.எஸ்., அணை. பல லட்சம் விவசாயிகள், இந்த அணையை நம்பியுள்ளனர்.
தமிழகத்துக்கும், இந்த அணையில் இருந்து தான் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
அணையின் முழு கொள்ளளவு 124.80 கன அடி. தற்போது 124.30 கன அடிக்கு தண்ணீர் உள்ளது. தொடர்ந்து 156 நாட்களாக அதிகபட்ச கொள்ளளவை தக்க வைத்துள்ளது.
கே.ஆர்.எஸ்., அணை கட்டி திறக்கப்பட்ட 1932ம் ஆண்டுக்கு பின், தொடர்ந்து இத்தனை நாட்கள் முழு கொள்ளளவு தண்ணீர் இருந்தது இல்லை.
இந்த அணையில் இருந்து, காவிரி நீர், தர்மபுரி மாவட்டம் பிலி குண்டுலு பகுதியை வந்தடைந்து, அங்கிருந்து மேட்டூருக்கு வருவது வழக்கம்.