தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ கே.எஸ்.சி.ஏ.,வுக்கு புதிய செயலர் நியமனம்

கே.எஸ்.சி.ஏ.,வுக்கு புதிய செயலர் நியமனம்

கே.எஸ்.சி.ஏ.,வுக்கு புதிய செயலர் நியமனம்


ADDED : அக் 03, 2024 08:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 03, 2024 08:09 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கர்நாடக செஸ் அசோசியேஷன் செயலராக கிராண்ட் மாஸ்டர் தேஜ்குமார், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

கே.எஸ்.சி.ஏ., எனும் கர்நாடக செஸ் அசோசியேஷன் செயலராக பணியாற்றிய அரவிந்த் சாஸ்திரியின் பதவி காலம் முடிவடைந்ததால், அவரது இடத்துக்கு செஸ் சாம்பியன் தேஜ் குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இது குறித்து கே.எஸ்.சி.ஏ., வெளியிட்ட அறிக்கை: ஏற்கனவே அரவிந்த் சாஸ்திரி, தன் பதவி காலத்தில் கே.எஸ்.சி.ஏ.,வை உயர் நிலைக்கு கொண்டு சென்றார்.

இப்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள செஸ் சாம்பியன் தேஜ்குமார், மேலும் உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்வார் என்ற நம்பிக்கை உள்ளது.

மைசூரு மாவட்ட செஸ் அசோசியேஷன் புதிய நிர்வாகிகள், புதிய தலைவர் வேணுகோபால், கே.எஸ்.சி.ஏ., செயலர் தேஜ்குமாருக்கு வாழ்த்து கூறியுள்ளனர். இவரது வழிகாட்டுதலில், செஸ் விளையாட்டு முன்னேற்றம் அடையும்.

தேஜ்குமார் அபார அனுபவம், திறமை, விளையாட்டு மீது அவருக்குள்ள ஆர்வம் கர்நாடகாவில், செஸ் விளையாட்டுக்கு வளமான எதிர்காலத்தை ஏற்படுத்தும். அவரது தலைமையில் அதிநவீன திட்டங்கள் செயல்படுத்தப்படும். இவைகள் செஸ் திறமைசாலிகளை ஊக்கப்படுத்தும். இந்தியாவின் செஸ் மையமாக கர்நாடகா உருவாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us