ADDED : பிப் 29, 2024 05:51 AM

ஷிவமொகா : பா.ஜ., முன்னாள் அமைச்சர் குமார் பங்காரப்பா. கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், ஷிவமொகா சொரப் தொகுதியில், தன் தம்பி மது பங்காரப்பாவிடம் தோற்றார்.
தேர்தலில் தோற்ற பின்னர், குமார் பங்காரப்பா கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டார். இதனால் அதிருப்தியில் இருக்கும் அவரை, காங்கிரஸுக்கு இழுக்கும் முயற்சி நடக்கிறது. இதற்கு அவரது தம்பி மது பங்காரப்பாவும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
குமார் பங்காரப்பாவை காங்கிரஸுக்கு அழைத்து வந்து, லோக்சபா தொகுதியில் ஷிவமொகாவில் நிறுத்த வேண்டும் என்று, காங்கிரஸ் பிளான் வைத்து உள்ளது. இதனால் உஷாரான பா.ஜ., தலைவர்கள், குமார் பங்காரப்பாவிடம் பேசி உள்ளனர்.
எக்காரணம் கொண்டும் கட்சியை விட்டு விலக வேண்டாம். லோக்சபா தேர்தலில் உத்தர கன்னடா தொகுதி 'சீட்' வழங்குவதாக கூறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை குமார் பங்காரப்பா மறுத்துவிட்டாராம். ஆனாலும், அவரை போட்டியிட வைக்க, முயற்சி நடப்பதாகவும் கூறப்படுகிறது.

