கும்பமேளா கூட்டநெரிசல்; எதிர்பாராத விபத்து என சுப்ரீம் கோர்ட் கருத்து
கும்பமேளா கூட்டநெரிசல்; எதிர்பாராத விபத்து என சுப்ரீம் கோர்ட் கருத்து
ADDED : பிப் 03, 2025 01:47 PM

புதுடில்லி: கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்டநெரிசல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், அலகாபாத் ஐகோர்ட்டை நாட உத்தரவிட்டது.
பிரயாக்ராஜில் நடக்கும் மஹா கும்பமேளாவில், மவுனி அமாவாசையான கடந்த ஜன.,29ம் தேதி ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 30 பேர் உயிரிழந்தனர். மேலும், 60 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, கும்பமேளாவில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடக் கோரியும், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாத உ.பி., அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்,  வக்கீல் விஷால் திவாரி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இது வழக்கு இன்று  நீதிபதி சஞ்சீவ் கன்னா முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, 'இது எதிர்பாராத விபத்து. இது தொடர்பாக ஏற்கனவே நீதி ஆணையம் அமைக்கப்பட்டு விட்டது. இது குறித்து அலகாபாத் ஐகோர்ட்டை அணுகலாம்', எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்தார்.

