தையல் போட்ட பெண் டாக்டருக்கு அடி; கேரளாவில் போதை நோயாளி ஆக்ரோஷம்
தையல் போட்ட பெண் டாக்டருக்கு அடி; கேரளாவில் போதை நோயாளி ஆக்ரோஷம்
ADDED : செப் 16, 2024 10:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவனந்தபுரம்: கேரளாவில் அரசு மருத்துவமனையில் காயத்துடன் வந்த நபருக்கு தையல் போட்ட பெண் டாக்கடருக்கு அடி விழுந்தது.
ஆழப்புழாவில் உள்ள வந்தனம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பெண் டாக்டர் அஞ்சலி பணியில் இருந்தார். இந்நேரத்தில் தலையில் காயத்துடன் ஷாஜூ என்ற நோயாளி வந்தார். சிகிச்சை அறையில் அவருக்கு முதலுதவி செய்ததுடன் தலையில் காயம்பட்ட இடத்தில் ஸ்டிச்சிங் (தையல்) போட்டார். இதில் வலி தாங்க முடியாத நோயாளி, டாக்டரின் கையை பிடித்து முறிக்க முற்பட்டார். ஆனால் பெண் டாக்டர் சிக்காமல் தப்பினார். தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள் ஓடி வரவே நோயாளி தப்பி ஓடி விட்டார்.
ஆழப்புழா போலீசார் நோயாளியை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

