லாலு மகன் தேஜ்பிரதாப் யாதவ் மருத்துவமனையில் ‛‛அட்மிட்''
லாலு மகன் தேஜ்பிரதாப் யாதவ் மருத்துவமனையில் ‛‛அட்மிட்''
UPDATED : மார் 15, 2024 08:11 PM
ADDED : மார் 15, 2024 08:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாட்னா: பீஹார் முன்னாள் முதல்வர் லாலு  பிரசாத் யாதவின் மூத்த மகனும்,  ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி மூத்த தலைவருமான தேஜ்பிரதாப் யாதவ், 36 உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பீஹாரில் ஐக்கிய ஜனதா தளம் , ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணியில் முதல்வராக நிதீஷ்குமார்  அமைச்சரவையில்  சுற்றுச்சூழல்துறை அமைச்சராக இருந்தார். தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
இந்நிலையில் இன்று (15 ம் தேதி) அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  உடனடியாக பாட்னா ராஜேந்திரா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப் பட்டார். டாக்டர்கள் அவருக்கு தீவிர  சிகிச்சை அளித்து வருகின்றனர்.

