மிசோரத்தில் மண் சரிவு: 10 பேர் பரிதாப பலி; மீட்பு பணிகள் தீவிரம்
மிசோரத்தில் மண் சரிவு: 10 பேர் பரிதாப பலி; மீட்பு பணிகள் தீவிரம்
UPDATED : மே 28, 2024 11:37 AM
ADDED : மே 28, 2024 11:36 AM

அய்சால்: மிசோரத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கல்குவாரியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி, 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் மாயமாகி உள்ளனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
மிசோரத்தில் உள்ள ஐஸ்வால் மாவட்டத்தில் இடைவிடாத மழை பெய்து வருகிறது. கனமழைக்கு மத்தியில், கல்குவாரியில் மண்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் சிக்கி உள்ளனர். இதனால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மீட்பு படையினர் மண் சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். மழை காரணமாக, அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. அவசர தேவைகளுக்கு மட்டும் வெளியே வர வேண்டும். தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.