ADDED : நவ 11, 2024 02:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ஏர் இந்தியாவுடன் நாளை இணைக்க இருப்பதால், விஸ்தாரா விமானங்கள் கடைசி நாளாக இன்று வானில் பறந்து வருகின்றன.
ஏர் இந்தியா நிறுவனத்தை, டாடா குழுமம் வாங்கிய நிலையில், விஸ்தாரா நிறுவனத்தை ஏர் இந்தியாவுடன் இணைக்கும் முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான பணிகள் 2022ம் ஆண்டு முதலே மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், கடந்த மாதம் விஸ்தாரா விமான சேவைக்கான டிக்கெட் விற்பனை முழுவதுமாக நிறுத்தப்பட்டது.
நாளை முதல் விஸ்தாரா விமானங்கள் ஏர் இந்தியா என்ற பெயரில் செயல்படும் என்றும், விமானத்தின் கலர் மற்றும் லோகோ மட்டுமே மாற்றப்படுவதாகவும், தரத்தில் எந்த குறையும் இருக்காது என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.