தொழிலதிபரை சுட்டுக் கொன்றது லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல்
தொழிலதிபரை சுட்டுக் கொன்றது லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல்
ADDED : பிப் 11, 2026 01:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : 'டில்லியின் பவானா பகுதியில் தொழிலதிபரை கொன்றது தாங்கள் தான்' என, கனடா நாட்டின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் தலைமையிலான கும்பல் அறிவித்துள்ளது.
டில்லியில் உள்ள பவானா என்ற இடத்தில், வைபவ் காந்தி, 35, என்பவர், கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை சுட்டுக் கொன்றவர்கள் யார் என போலீசார் தேடி வந்தனர்.
அவர் வைத்திருந்த பையை பறிக்க முயன்ற, இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கும்பல், முடியாததால், அவரை சுட்டுக் கொன்றனர்.
சமூக வலைதளம் ஒன்றில் வந்திருந்த பதிவில், அவரை கொன்றது கனடா நாட்டின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் ஜிதேந்தர் கோகி மான், ஹசிம் பாபா, காலா ரானா குழுக்கள் தான் என கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, அந்த தாதா கும்பலை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

