ADDED : பிப் 11, 2026 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : தென் மேற்கு டில்லியில் உள்ள துவாரகாவில், மாருதி ஸ்விப்ட் கார் நேற்று பகலில் தீப்பிடித்து எரிந்தது. எனினும், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
துவாரகாவில் நேற்று மதியம், 12:40க்கு சாலையில் சென்று கொண்டிருந்த மாருதி ஸ்விப்ட் கார், தீப்பிடித்து எரிவதாக, தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர், 1:20 மணிக்குள் தீயை அணைத்தனர். எனினும், அந்த காரில் லேசாக தீப்பற்றியுள்ளது என்பதை அறிந்த அந்த காரை ஓட்டி வந்தவர்கள், கீழே இறங்கி, தப்பினர்.
அவர்கள் யார், அந்த கார் எத்தனை ஆண்டுகள் பழமையானது என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

