ADDED : டிச 08, 2025 12:06 AM

'இண்டி' கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்களே, காங்., - எம்.பி., ராகுல் திறமையற்றவர் என, கூறுகின்றனர். ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவாக இருந்தாலும் சரி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனாக இருந்தாலும் சரி, காங்கிரசுடன் கூட்டணி வைத்தால், தேர்தலில், 'பூஜ்யம்' தான் கிடைக்கும் என, நம்புகின்றனர்.
பிரதீப் பண்டாரி தேசிய செய்தி தொடர்பாளர், பா.ஜ.,
உச்ச வரம்பு நிர்ணயித்தது சரியே!
ஒரு வழியாக, விமான போக்குவரத்து அமைச்சகம், 'எகானமி' வகுப்பு கட்டணங்களுக்கு உச்ச வரம்பு நிர்ணயித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. விமானத்துறையில் இரட்டை ஆதிக்கம் நீடிக்கும் வரை, இது தொடர வேண்டும். வலுவான போ ட்டி இல்லாத நிலையில், பொது நலனை பாதுகாக்க ஒரே வழி கட்டணக் கட்டுப்பாடே ஆகும்.
சிதம்பரம் மூத்த தலைவர், காங்.,
சும்மா இருக்க மாட்டோம்!
மசூதி கட்டுவதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், முகலாய மன்னர் பாபரின் பெயரில் கட்டினால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். அதற்கு நிச்சயம் எதிர்ப்பு தெரிவிப்போம். அது மட்டுமின்றி அந்த மசூதியை இடித்து தரைமட்டமாக்குவோம். இதில், எந்த சந்தேகமும் வேண்டாம்.
கேசவ் பிரசாத் மவுரியா உ.பி., துணை முதல்வர், பா.ஜ.,

