'ம.ஜ.த.,வினர் எதிர்காலத்தை அவர்களே தீர்மானிக்கட்டும்'
'ம.ஜ.த.,வினர் எதிர்காலத்தை அவர்களே தீர்மானிக்கட்டும்'
ADDED : பிப் 04, 2025 06:40 AM

சதாசிவ நகர்: ''ம.ஜ.த.,வின் எந்த எம்.எல்.ஏ.,வும் எங்களை தொடர்பு கொள்ளவில்லை. அக்கட்சி தொண்டர்களின் எதிர்காலத்தை அவர்களே தீர்மானிக்கட்டும்,'' என, துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கர்நாடகா அரசு திவாலாகி விட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார். மத்திய அரசு எத்தனை லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளது என்பது தெரிய வேண்டும். நம் மாநில அரசு, இவ்வளவு பெரிய கடன் வாங்கவில்லை.
மாநிலத்தில் வாக்குறுதித் திட்டத்தை அறிவித்தபோது, திவாலாகி விடும் என்று கூறிய பிரதமர் மோடி, தற்போது தேர்தல் நடக்கும் மாநிலங்களில் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார்.வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவே எங்கள் அரசு வாக்குறுதித் திட்டத்தை அறிவித்ததே தவிர, ஓட்டுக்காக அல்ல.
நம் மாநில அரசின் நிதி நிலைமை, திவால் நிலையை விட்டு விடுங்கள். மத்திய அரசின் பட்ஜெட்டில், கர்நாடக மாநிலத்துக்கு என்னென்ன பங்களிப்பை அளித்துள்ளனர் என்ற பட்டியலை முதலில் தரட்டும்.
ம.ஜ.த.,வின் எந்த எம்.எல்.ஏ.,வும் எங்களை தொடர்பு கொள்ளவில்லை. அக்கட்சி தொண்டர்களின் எதிர்காலத்தை அவர்களே தீர்மானிக்கட்டும். எத்தனை காலத்துக்கு தான் அவர்களால் காத்திருக்க முடியும்? அவர்களுக்கும் மதச்சார்பற்ற சித்தாந்தம் கொண்ட தேசிய கட்சி தேவை. பலரும் எங்கள் கட்சியில் சேர முடிவு செய்துள்ளனர். நான் யாரிடமும் பேசவில்லை. நான் பேசியதாக வரும் செய்திகள் பொய்யானவை.
இவ்வாறு கூறினார்.

