2019 தேர்தலை விட சிறப்பாக செயல்படுவோம்: சசிதரூர் நம்பிக்கை
2019 தேர்தலை விட சிறப்பாக செயல்படுவோம்: சசிதரூர் நம்பிக்கை
ADDED : ஜன 15, 2024 03:47 PM

திருவனந்தபுரம்: '2019ல் சில மாநிலங்களில் மோசமான செயல்திறனால் தோற்றோம், இந்த முறை கண்டிப்பாக 2019ஐ விட சிறப்பாக செயல்படுவோம்' என காங்., எம்.பி., சசிதரூர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம் லோக்சபா தொகுதி காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: பா.ஜ.,வுக்கு எதிராக ஆக்கப்பூர்வமாக ஒன்றிணைந்தால், அவர்களை பெரும்பான்மைக்கும் கீழே தள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. ஹரியானா, ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்கு பூஜ்ஜிய இடங்களும், மத்திய பிரதேசம், பீஹார், கர்நாடகாவில் தலா ஒரு இடமும் மட்டுமே கிடைத்தன.
பல மாநிலங்களில் எங்களின் மோசமான செயல்திறனால் தோல்வியடைந்தோம். இந்த முறை கண்டிப்பாக அந்த மாநிலங்களில் எல்லாம் சிறப்பாக செயல்பட போகிறோம். 2019ஐ விட மிக சிறப்பாக செயல்படுவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இது லாஜிக்கான அலசல் தான். மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இந்த ஜனநாயக நாட்டில் ஓட்டளிப்பதையும், நாட்டின் நலனுக்காக என்ன செய்ய வேண்டும் என்பதையும் மக்களிடம் விட்டுவிடுகிறோம்.