ADDED : மே 01, 2024 08:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கர்நாடக மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரி, பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தாவுக்கு எழுதிய கடிதத்தில், 'எம்.பி., பிரஜ்வல் ஆபாச வீடியோ வழக்கில், சமூக வலைதளங்களில் சில பெண்களின் வீடியோ, புகைப்படங்கள் வெளியாகின.
அதை சமூக வலைதளங்களில் சிலர் ஷேர் செய்து வருகின்றனர். இதன்மூலம் பாதிக்கப்பட்ட பெண்கள் குடும்பத்தில் பிரச்னை நடக்கிறது. அந்த பெண்ணின் கண்ணியம் பறிபோகிறது. வீடியோவை ஷேர் செய்பவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறப்பட்டு உள்ளது.