ADDED : ஜூன் 21, 2025 07:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மீரட்:பயிற்சி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த, விளையாட்டுப் பயிற்சியாளருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம், அனுப்நகர் பசல்பூரைச் சேர்ந்தவர் மணீஷ் என்ற மேக்ஸ். விளையாட்டுப் பயிற்சியாளர். இவரிடம் பல சிறுமியர் விளையாட்டுப் பயிற்சி பெற்று வந்தனர். கடந்த, 2023ம் ஆண்டு, ஜூடோ பயிற்சி மாணவியான சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். சிறுமியின் தந்தை கொடுத்த புகார்படி, போலீசார் வழக்குப் பதிவு செய்து மணீஷை கைது செய்தனர்.
இந்த வழக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சங்கீதா முன் நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது. மணீஷுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 50,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.