ADDED : ஜூன் 13, 2025 08:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரேலி:நான்கு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
உத்தர பிரதேச மாநிலம், பரேலி மாவட்டம் ஆன்லா அருகே கிராமத்தைச் சேர்ந்தவர் ரிஷிபால் சிங். கடந்த, 203ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி நான்கு வயது சிறுமியை, தோட்டத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
சிறுமியின் தந்தை கொடுத்த புகார்படி வழக்குப் பதிவு செய்த போலீசார், ரிஷிபால் சிங்கை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி தேவாஷிஷ் பாண்டே, ரிஷிபால் சிங்குக்கு ஆயுள் தண்டனை மற்றும் 20,000 ரூபாய் அபராதம் விதித்தார்.