ADDED : நவ 09, 2025 10:06 PM
ஆக்ரா: கணவரைக் கொலை செய்த பெண் மற்றும் அவரது காதலன் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், தாய்க்கு எதிராக மகன்கள் சாட்சியம் அளித்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டம் தவுகியில் வசித்தவர் ராம்வீர்,32. அவரது மனைவி குஸ்மா தேவி.
இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சுனில் என்ற வாலிபருடன் குஸ்மா தேவிக்கு தொடர்பு ஏற்பட்டது. கடந்த, 2019ம் ஆண்டு குஸ்மா தேவி, சுனில் மற்றும் சுனிலில் நண்பர் தர்மவீர் ஆகிய மூவரும் சேர்ந்து, ராம்வீரை மண்வெட்டியால் வெட்டிக் கொலை செய்தனர்.
இதுகுறித்து, ராம்வீரின் மாமா டிக்காராம் கொடுத்த புகார்படி வழக்குப் பதிவு செய்த போலீசார், மூவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, ஆக்ரா கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது.
குஸ்மா தேவியின் இரண்டு மகன்களும் தங்கள் தாய்க்கு எதிராக சாட்சியம் அளித்தனர். விசாரணை நிறைவடைந்த நிலையில், மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து, நீதிபதி சஞ்சய் கே.லால் தீர்ப்பளித்தார்.

