ADDED : ஜன 18, 2025 11:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சுல்தான்பூர்:கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி, நெஞ்சுவலி ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
உத்தர பிரதேச மாநிலம் கோட்வாலி நகரைச் சேர்ந்த ராணுவ வீரர் அஜய் பிரதாப் சிங் 2009ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சத்யநாராயண் சிங்,76,குக்கு, நீதிமன்றம் 2021ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்தது. அவர், சுல்தான்பூர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
நேற்று காலையில், சத்யநாராயணனுக்கு நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மரணம் அடைந்தார்.
உடற்கூறு ஆய்வுக்குப் பின், குடும்பத்தினரிடம் இன்று உடல் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

