மதுபான கொள்கை வழக்கு: கவிதாவுக்கு ஜாமின் வழங்க மறுப்பு
மதுபான கொள்கை வழக்கு: கவிதாவுக்கு ஜாமின் வழங்க மறுப்பு
UPDATED : மே 06, 2024 08:52 PM
ADDED : மே 06, 2024 08:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவ் மகள் கவிதாவிற்கு ஜாமின் வழங்க டில்லி கோர்ட் மறுத்தது.
டில்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான கொள்கையில் நடந்த முறைகேட்டை சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.இதில் தொடர்புடையதாக தெலுங்கானாவின் பாரதிய ராஷ்ட்ரீய தெலுங்கான கட்சியின் கவிதா மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்கு தொடர்ந்துள்ளது. சி.பி.ஐ.யும் வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த இருவழக்குகளில் கடந்த மார்ச் 15-ம் தேதி கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்தது. கவிதா திகார் சிறையில் உள்ளார்.
டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடைபெற்று வரும் வழக்கில் ஜாமின் கோரி கவிதா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி காவேரி பவாஜா, ஜாமின் வழங்க மறுத்தார்.