பா.ஜ., மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்; டாக்டர்கள் தகவல்
பா.ஜ., மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்; டாக்டர்கள் தகவல்
ADDED : டிச 18, 2024 07:42 AM

புதுடில்லி: பா.ஜ., மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி, 96, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து டில்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் டிசம்பர் 13ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, மூத்த நரம்பியல் நிபுணர் டாக்டர் வினித் சூரி கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.இந்நிலையில், பா.ஜ., மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 96 வயதான, எல்.கே.அத்வானிக்கு நரம்பியல் துறையின் டாக்டர் வினித் சூரி சிகிச்சை அளித்து வருகிறார். அவரது உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. அவர் ஐ.சி.யூ.வில் இருந்து அடுத்த இரண்டு நாட்களில் மாற்றப்படுவார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.