குஜராத், உ.பி., உள்ளிட்ட 6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்ற தேர்தல் கமிஷன் உத்தரவு
குஜராத், உ.பி., உள்ளிட்ட 6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்ற தேர்தல் கமிஷன் உத்தரவு
UPDATED : மார் 18, 2024 03:07 PM
ADDED : மார் 18, 2024 03:04 PM

புதுடில்லி: குஜராத், உ.பி., பீஹார், ஜார்கண்ட், உத்தரகண்ட், ஹிமாச்சல் ஆகிய 6 மாநிலங்களின் உள்துறை செயலாளர்களை மாற்ற இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மார்ச் 16ம் தேதி இந்தியாவில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் அறிவித்தார். தேர்தல் நன்னடத்தை விதிகளும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. முதற்கட்டம் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி துவங்குகிறது. 7வது கட்டம் ஜூன் 1ம் தேதி முடிவடைகிறது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாகுகிறது.
இந்நிலையில், குஜராத், உ.பி., பீஹார், ஜார்கண்ட், உத்தரகண்ட், ஹிமாச்சல் ஆகிய 6 மாநிலங்களின் உள்துறை செயலாளர்களை மாற்ற இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் உத்தரவிட்டுள்ளார். மேற்கு வங்க டி.ஜி.பி.,யையும் மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், மாநிலத்தின் முக்கிய அதிகாரிகளைத் தேர்தல் கமிஷன் நீக்குவது என்பது வழக்கமான நடவடிக்கையாகும்.

