தமிழகத்தில் வேட்பாளர் செலவு தொகை ரூ.95 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு
தமிழகத்தில் வேட்பாளர் செலவு தொகை ரூ.95 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு
ADDED : மார் 18, 2024 03:30 PM

சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் வேட்பாளர் செலவினம் ரூ.95 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்.,19ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், லோக்சபா தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து சென்னையில் இருந்து காணொளி வாயிலாக, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தினார்.
அப்போது லோக்சபா தேர்தலுக்கான ஏற்பாடுகள், வேட்பு மனு தாக்கல் தொடர்பாக அதிகாரிகளுடன் சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் வேட்பாளர் செலவினம் ரூ.95 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
அதேபோல் தமிழகத்தில் சட்டசபை தொகுதிக்கு வேட்பாளர் செலவினம் ரூ. 40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின் போது, ரூ. 70 லட்சமாக வேட்பாளர் செலவினம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

