ADDED : ஏப் 09, 2024 11:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை: இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் சென்செக்ஸ் 75 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் 2024-25 நிதியாண்டின் முதல் வர்த்தக நாளில் இருந்து உயர்வுடன் காணப்படுகிறது. அந்த வகையில் இன்றும் (ஏப்.,9) ஏற்றத்துடன் வர்த்தகமாகின. வர்த்தகம் துவங்கியதுமே முதன்முறையாக சென்செக்ஸ் 381.78 புள்ளிகளை கடந்து 75,124.28 புள்ளிகளை எட்டி சாதனை படைத்துள்ளது. அதேபோல் நிப்டி 50 புள்ளிகள் அதிகரித்து 22,765.10 புள்ளிகளுடன் புதிய உச்சத்தை எட்டியது.
நிறுவனங்களின் நம்பிக்கையூட்டும் காலாண்டு வருவாய், நிலையான ரெப்போ வட்டி விகிதம், நேர்மறையான உலக பொருளாதார குறியீடுகள், லோக்சபா தேர்தலுக்கு பிறகு நிலையான ஆட்சி அமைய கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளிட்டவை பங்கு சந்தையின் ஏற்றத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

