ADDED : மே 04, 2024 11:10 PM

லோக்சபா தேர்தலில் கூட்டாகவோ அல்லது எதிர்த்தோ பிரசாரம் செய்யும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கு பின் ஒன்றாக கைகோர்ப்பர். கூட்டணி அரசின் நன்மை என்னவென்றால், யார் பிரதமர் ஆனாலும் எந்தவிதமான சர்வாதிகாரமும் இருக்காது.
சசி தரூர், லோக்சபா எம்.பி., காங்கிரஸ்
பதில் சொல்ல பயம்!
உத்தவ் தாக்கரேவிடம் கேட்கிறேன், ராமர் கோவில் நல்ல விஷயமா, கெட்ட விஷயமா? பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவை தடை செய்ய வேண்டுமா, கூடாதா? சி.ஏ.ஏ., வேண்டுமா, கூடாதா? இவற்றுக்கு பதில் சொன்னால் ஓட்டு வங்கி பறிபோகும் என அவருக்கு பயம்.
அமித் ஷா. மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,
மன்னருக்கு எல்லாம் மன்னர்!
மோடி என் அண்ணன் ராகுலை இளவரசர் என்கிறார். இந்த இளவரசர் தான் மக்களின் குறைகளை கேட்க கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4,000 கி.மீ., நடந்தவர். மன்னருக்கு எல்லாம் மன்னரான நீங்கள் சொகுசாக அரண்மனையில் வாழ்கிறீர்கள்.
பிரியங்கா, பொதுச்செயலர், காங்கிரஸ்