பிரான்ஸ் அதிபர் மேக்ரானை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்: பிரதமர் மோடி
பிரான்ஸ் அதிபர் மேக்ரானை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்: பிரதமர் மோடி
ADDED : ஜன 13, 2026 10:08 PM

புதுடில்லி: பிரான்ஸ் அதிபர் மேக்ரானை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்த சூழலில் அவரை வரவேற்க ஆவலுடன் காத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:
அதிபர் மேக்ரானின் ராஜதந்திர ஆலோசகரை சந்தித்ததில் மகிழ்ச்சி. பல களங்களில் நெருக்கமான ஒத்துழைப்பால், வலுவான மற்றும் நம்பகமான இந்தியா-பிரான்ஸ் கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்தியது.
இந்தியா-பிரான்ஸ் ஆகிய இருநாடுகளுக்கு இடையே, புதுமை, தொழில்நுட்பம் மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் உறவு வலுவடைந்து வருவதை காண ஊக்கமளிக்கிறது. முக்கிய பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து ஆலோசனைகள் நடத்தினோம். பிரான்ஸ் அதிபர் மேக்ரானை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

