குருகிராமில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் வீழ்ந்த லாரி
குருகிராமில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் வீழ்ந்த லாரி
ADDED : ஜூலை 10, 2025 10:24 PM

புதுடில்லி:டில்லி மற்றும் சுற்றுப்புறங்களில் நேற்று அதிகாலை முதல், பலத்த மழை பெய்தது. இதனால், பல இடங்களில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மழையால் வெப்ப நிலை தணிந்து, இந்த சீசனின் சராசரி வெப்ப நிலையை விட, 4.3 டிகிரி செல்ஷியஸ் குறைந்து, 23 டிகிரி செல்ஷியஸ் ஆக பதிவானது.
ஹரியானா மாநிலம் குருகிராமில் சாலை ஒன்றில், திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் லாரி கவிழ்ந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த பாதை, ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு, போக்குவரத்து சீரானது.
திடீரென நிகழ்ந்த இந்த விபத்தால், அந்த லாரியின் டிரைவர் மற்றும் நடத்துனர் உயிர் தப்பினர். அந்த பகுதியில் நடந்து வரும் சிவில் வேலைகளால், அடிப்புற மண் தளர்ந்து இருந்ததால், திடீரென பள்ளம் ஏற்பட்டது என கூறப்பட்டுள்ளது.
இந்த விபத்தால், அந்த பகுதியில் போக்குவரத்து சீராக பல மணி நேரம் ஆனது. லாரி மூழ்கும் அளவுக்கு பள்ளம் ஏற்பட்டது, அந்த பகுதியில் சென்ற வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.

