ADDED : ஜன 09, 2024 05:10 PM

மும்பை: புகழ்பெற்ற ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் பாடகர் உஸ்தாத் ரஷீத் கான் காலமானார். அவருக்கு வயது 55.
இந்திய கிளாசிக்கல் மற்றும் ஹிந்துஸ்தானின் பாரம்பரிய இசையில் புகழ்பெற்ற இவர், உ.பி.,யை சேர்ந்தவர். புகழ்பெற்ற பாடகர் இனாயத் ஹூசைன் கானின் பேரன். இந்திய கிளாசிக், ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசையில் பல்வேறு ஆல்பம் பாடல்களை உருவாக்கியுள்ள இவர், பாலிவுட் படங்களில் பல்வேறு பாடல்களை பாடி உள்ளார்.
புற்றுநோய் காரணமாக கோல்கட்டாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி இன்று (ஜன.,09) மாலை 3:45 மணிக்கு காலமானார். இதனை மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளது.
தகவல் அறிந்த மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மருத்துவமனைக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். உஸ்தாத் ரஷீத் கான் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.