மஹா., தேர்தலில் 12 சீட் வேணும்: காங்., கூட்டணிக்கு சமாஜ்வாதி நெருக்கடி!
மஹா., தேர்தலில் 12 சீட் வேணும்: காங்., கூட்டணிக்கு சமாஜ்வாதி நெருக்கடி!
ADDED : அக் 17, 2024 09:10 PM

லக்னோ: மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில், நாங்கள் 12 தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறோம் என சமாஜ்வாதி கட்சியின் மஹாராஷ்டிரா மாநில தலைவர் அபு ஆஷ்மி கூறினார்.
மஹாராஷ்டிராவில், சட்டமன்ற தேர்தல் வரும் நவ.20 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்றும், நவ.23ம் தேதி ஓட்டு எண்ணிக்கை என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் மஹா விகாஸ் அகாடி கூட்டணி, சீட் ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தையை துவக்கி உள்ளது.
இது குறித்து சமஜ்வாதி கட்சியின் தலைவர் அபு ஆஷ்மி கூறியதாவது:
தற்சமயம், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்-சரத்பவார் அணி மற்றும் சிவசேனா- உத்தவ் தாக்கரே அணியுடன் தான் சீட் ஒதுக்கீடு பேச்சு நடைபெறுகிறது.
சிறிய கட்சிகளுடனான பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை.
நான் நேற்று 12 சீட் வேண்டும் என என்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தேன். கட்சியின் தலைமையை கேட்காமல் அறிவித்துவிட்டதாக பேசப்பட்டுவிட்டது.
அதனால் காங்கிரஸ் கட்சியுடன் மன கசப்பு ஏற்பட்டுவிட்டதாக செய்திகள் பரவின. காங்கிரஸ் கட்சியிடன் எந்த மனக்கசப்பும் இல்லை. எங்களுக்கு தேவையான சீட்களை அவர்கள் கொடுப்பார்கள் என நம்பிக்கை உள்ளது. கட்சி தலைவர் அகிலேஷ் அதிக சீட் கேட்டு பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அபு ஆஷ்மி கூறினார்.
இதனிடையே அகிலேஷ், சீட் ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த நாளை மஹாராஷ்டிரா செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார்.
2019-மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாதி, 7ல் போட்டியிட்டு 2 மட்டுமே வெற்றி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

