ADDED : பிப் 04, 2025 11:32 PM

பாலக்காடு; எடத்தறை பகவதி அம்மன் கோவிலில், மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது.
கேரள மாநிலம், பாலக்காடு, எடத்தறை விஸ்வகர்மா நகரில் அமைந்துள்ளது பூண்டிச்சேரி வெழுத்தன் பகவதி அம்மன் கோவில். இங்கு நூறணி ஈஸ்வர ஐயர் தலைமையில் மகா கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் நேற்று நடந்தன.
காலையில் மங்களஇசையுடன் விக்னேஸ்வர பூஜை, மகா சுதர்சன ஹோமம், வாஸ்து பலி, வாஸ்து சாந்தி, நவகிரக ஹோமம், நவகிரக பூஜை, மிருத்யுஞ்சய ஹோமம், தன்வந்திரி ஹோமம், பிம்ப தன்வந்திரி ஹோமம், விளக்கு பூஜை, கலச பூஜை, கலசாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, கலசங்கள் எடுத்துவரப்பட்டு, கோபுர விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் திரளாக பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் தீபாராதனை, விசேஷ பூஜைகள் நடந்தன.