மஹாராஷ்டிராவில் மீண்டும் அமைகிறது பா.ஜ., கூட்டணி ஆட்சி
மஹாராஷ்டிராவில் மீண்டும் அமைகிறது பா.ஜ., கூட்டணி ஆட்சி
UPDATED : நவ 23, 2024 10:22 PM
ADDED : நவ 23, 2024 08:00 AM
முழு விபரம்

மும்பை: மஹாராஷ்டிராவில் பா.ஜ., தலைமையிலான மகா யுதி கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. , பா.ஜ., தலைமையிலான மஹாயுதி கூட்டணி 236 தொகுதிகளிலும், மஹா விகாஸ் அகாடி கூட்டணி 48 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
மஹாராஷ்டிராவில் உள்ள, 288 சட்டசபை தொகுதிகளுக்கும் நவம்பர் 20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. பெரும்பான்மைக்கு 145 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தேர்தலில், காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்., பிரிவு மற்றும் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா பிரிவு ஆகியவை அடங்கிய மஹா விகாஸ் அகாடி கூட்டணி, பா.ஜ., தலைமையிலான ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மஹாயுதி கூட்டணி போட்டியிட்டன.
இது சரத்பவாரின் தேசியவாத காங்., கட்சி பிளவுபட்ட பின் நடைபெற்ற முதல் சட்டசபை தேர்தல். இதனால் முக்கியமான தேர்தலாக மஹாராஷ்டிரா மாநில அரசியல் களத்தில் பார்க்கப்பட்டது. தேர்தலில், 30 ஆண்டுகளில் இல்லாத வகையில், 66.05 சதவீதம் ஓட்டுப்பதிவானது. சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று (நவ.,23) எண்ணப்பட்டன.
இதில்,
சிவசேனா, பா. ஜ., கூட்டணி கட்சிகள் (மஹாயுதி கூட்டணி) -236
மஹா விகாஸ் அகாடி கூட்டணி -48
மற்றவை- 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
கட்சி வாரியாக
பா.ஜ., -132
ஏக்நாத் ஷிண்டே சிவசேனா-57
அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் -41
காங்கிரஸ்-16
உத்தவ் தாக்கரேயின் சிவசேனா -20
சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ்-10
சமாஜ்வாதி, ஜன் சுயராஜ்யா சக்தி கட்சி, சுயேச்சைகள் தலா 2
ராஷ்ட்ரீய யுவ சுவாபிமான் கட்சி, ராஷ்ட்ரீய சமாஜ் பக்ஷா, ஏஐஎம்ஐஎம், சிபிஐ(எம்), பிடபிள்யூபிஐ, ஆர்எஸ்விஐ தலா ஒரு தொகுதிகளில் ( மொத்தம் 6) வெற்றி பெற்றுள்ளன.
தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன.