மஹாராஷ்டிராவில் மாற்றியோசித்த ஆட்டோ டிரைவர்: பாராட்டும் நெட்டிசன்கள்
மஹாராஷ்டிராவில் மாற்றியோசித்த ஆட்டோ டிரைவர்: பாராட்டும் நெட்டிசன்கள்
ADDED : நவ 02, 2025 10:18 PM

மும்பை: மும்பையில் ஆட்டோ டிரைவர், தனது வாகனத்தை சொகுசாக மாற்றி பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். இது குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாக நெட்டிசன்களின் பாராட்டை பெற்றுள்ளது.
இது தொடர்பாக சமூக ஊடகத்தில் வெளியான வீடியோவில், அந்த ஆட்டோவில் ஏசி வசதி,தேவைக்கு ஏற்ப இருக்கையை மாற்றும் வசதி என சொகுசு காரில் பயணம் வகையில் உள்ளது. மேலும், ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டு கதவுகள் உள்ளன. நீண்ட தூரம் பயணத்தின் போது, பின்பக்க இருக்கையை படுக்கையாக மாற்றிக் கொள்ள முடிவதுடன், இருக்கை கீழ் நிறைய பொருட்கள் வைக்கவும் இடம் உள்ளது. இந்த ஆட்டோ மஹாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தின் பத்னேரா பகுதியில் ஓடுவதாக அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர்கள் டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க்கை டேக் செய்து, இந்த ஆட்டோ ஓட்டுநரை பாராட்டி வருகின்றனர்.

