sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

விபத்தில் சிக்குவோருக்கு ரூ.1 லட்சம் இலவச சிகிச்சை: மஹாராஷ்டிரா அரசு

/

விபத்தில் சிக்குவோருக்கு ரூ.1 லட்சம் இலவச சிகிச்சை: மஹாராஷ்டிரா அரசு

விபத்தில் சிக்குவோருக்கு ரூ.1 லட்சம் இலவச சிகிச்சை: மஹாராஷ்டிரா அரசு

விபத்தில் சிக்குவோருக்கு ரூ.1 லட்சம் இலவச சிகிச்சை: மஹாராஷ்டிரா அரசு

2


UPDATED : ஏப் 19, 2025 03:51 AM

ADDED : ஏப் 19, 2025 12:38 AM

Google News

UPDATED : ஏப் 19, 2025 03:51 AM ADDED : ஏப் 19, 2025 12:38 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: மஹாராஷ்டிரா அரசு, ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் விபத்தில் சிக்கும் நபர்களுக்கு, 1 லட்சம் ரூபாய் வரை பணமில்லா சிகிச்சை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.

இம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அபித்கர், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

ஏற்கனவே உள்ள மத்திய அரசின் மருத்துவக் காப்பீடு திட்டமான ஆயுஷ்மான் திட்டத்துடன் இணைந்து, மஹாராஷ்டிராவில் மஹாத்மா ஜோதிராவ் புலே ஜன் ஆரோக்கிய திட்டம் செயல்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் விபத்தில் சிக்குவோருக்கு, 1 லட்சம் ரூபாய் வரை பணமில்லா சிகிச்சை வழங்க முடிவு செய்யப்பட்டுஉள்ளது.

இதற்காக காப்பீடு திட்டத்தில், 3,000 மருத்துவமனைகள் கூடுதலாக சேர்க்கப்பட உள்ளன.

இந்த திட்டத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகள், படுக்கை விபரங்கள், புகார்கள் பதிவு ஆகியவற்றுக்கு தனி செயலி உருவாக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us