மஹாராஷ்டிரா ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகள் தேர்தல் தேதி மாற்றம்
மஹாராஷ்டிரா ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகள் தேர்தல் தேதி மாற்றம்
ADDED : ஜன 29, 2026 09:56 PM

மும்பை: மஹாராஷ்டிராவில் நடைபெறவுள்ள 12 மாவட்ட ஊராட்சிகள், 125 ஊராட்சி ஒன்றியங்களுக்கான தேர்தல் தேதிகளை மாநில தேர்தல் ஆணையம் மாற்றியமைத்துள்ளது.
விமான விபத்தில் காலமான மஹாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் மறைவுக்கு மார்ச் 28 முதல் 30 வரை மூன்று நாட்கள் அரசு முறை துக்கம் கடைபிடிக்கப்பட்டதால், முன்னதாக பிப்ரவரி 5 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட தேர்தல் தேதியும், பிப்ரவரி 7 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட ஓட்டு எண்ணிக்கை தேதியும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள புதிய தேர்தல் கால அட்டவணை:
ஓட்டுப்பதிவு, பிப்ரவரி 7, (சனிக்கிழமை) காலை 7:30 முதல் மாலை 5:30 மணி வரை.
ஓட்டு எண்ணிக்கை, பிப்ரவரி 9, (திங்கட்கிழமை) காலை 10:00 மணி முதல்.
பிப்ரவரி 5, 2026 இரவு 10:00 மணியுடன் பொதுப் பிரச்சாரம் நிறைவடையும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் பிப்ரவரி 11, அன்று அரசிதழில் வெளியிடப்படும்.
இவ்வாறு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

