
உ.பி.,யில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில், வாக்காளர்களிடம் ஜாதி தரவுகளைச் சேகரிக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும். இது, பொருளாதார மற்றும் சமூக நீதியின் அடிப்படையில் ஒரு மாநிலத்தை உருவாக்க வாய்ப்பாக அமையும்.
அகிலேஷ் யாதவ் தலைவர், சமாஜ்வாதி
அவமரியாதை!
தே.ஜ., கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டில் முதல்வர் நிதிஷ் குமாரை பேச அனுமதிக்காதது, பீஹாரிகளை அவமதிக்கும் செயல். 20 ஆண்டுகால ஆட்சி குறித்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு அஞ்சி, அக்கூட்டணி தலைவர்கள், 26 வினாடிகளில் செய்தியாளர்கள் சந்திப்பை நிறைவு செய்தனர்.
அசோக் கெலாட் மூத்த தலைவர், காங்கிரஸ்
அதிகாரங்களை பயன்படுத்துங்க!
மாநில அந்தஸ்து இல்லாததை சுட்டிக்காட்டி தேர்ந்தெடுக்கப்பட்ட ஜம்மு - காஷ்மீர் அரசு, மக்களுக்கு பணியாற்றுவதை தவிர்த்து வருகிறது. இதுபோல் மக்களை தவறாக வழிநடத்துவதை விடுத்து, அவர்களின் முன்னேற்றத்திற்காக தன் அதிகாரங்களை தற்போதைய அரசு பயன்படுத்த வேண்டும்.
மனோஜ் சின்ஹா துணைநிலை கவர்னர், ஜம்மு - காஷ்மீர்

