ADDED : பிப் 19, 2025 01:06 PM

திருவனந்தபுரம்: திருச்சூரில் யானை தாக்கி, பழங்குடி யினத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவர் உயிரிழந்தார்.
கேரளாவில் மனிதர்களை வன விலங்குகள் தாக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இன்று (பிப்.,19) திருச்சூரில் உள்ள பீச்சி அருகே மூலிகைப்பொருட்கள் சேகரிக்க பழங்குடி யினத்தை சேர்ந்த பிரபாகரன், 60, என்பவர் சென்றுள்ளார்.
அவரை நீண்ட நேரம் காணவில்லை என உறவினர்கள் பதறி போயினர். பின்னர் பிரபாகரன் மகனும், அவரது உறவினர் ஒருவரும் காட்டுப்பகுதிக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, காட்டு யானை தாக்கி பிரபாகரன் உயிரிழந்தது தெரியவந்தது.
இது குறித்து, வனத்துறை அதிகாரி அஜிதா கூறியதாவது: கடந்த சில மாதங்களாக உணவு மற்றும் தண்ணீருக்காக யானைகள் பீச்சி பகுதிகளுக்குள் வருகிறது. அப்பகுதியில் பழங்குடியின மக்கள் அதிகமாக செல்வதால், தாக்குதல் சம்பவங்கள் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் இதுவரை யானைகள் மற்றும் புலிகள் தாக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.